பந்தயப் பொருள்🏃🏃
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான எனதருமை சகோதர,சகோதரிகளே..உலக இரட்சகராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
இன்றைய தியானத்தில் நாம் பார்கவிருக்கும் தலைப்பு 'பந்தயப் பொருள்' பொதுவாக நாம் யாவருக்கும் ஏதாவது ஒரு பந்தயத்தில் பங்குபெற்று வெற்றியின் கனியை சுவைக்கும் ஆசை இருக்கும்,சிலர் சுவைத்தும் இருப்பீர்கள்,மிக்க மகிழ்ச்சி!
இங்கு வேதத்திலும் ஒரு பந்தயம் குறிப்பிடப்பட்டுள்ளது,ஆனால் இங்கு பரிசு பொருள் தங்கமோ,வெள்ளியோ,வைரமோ அல்ல;அதற்கும் மேலான ஒன்று,அப்படி என்ன அது என்று கேட்கிறிர்களா சரி தொடர்ந்து படியுங்கள் சொல்கிறேன்.
'கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். '
பிலிப்பியர் 3:14
இதுவே அந்த பந்தயம்,பரம அழைப்பு பெற்ற நாம் அனைவருமே இதில் ஓடுகிறோம்,பொதுவாக பந்தயம் எளிதில் இருக்காது இங்கு நாம் ஓடுவது நித்திய ஜிவனை சுதந்தரித்து கொள்ள எனவே தடைகள் பல உண்டு,
'என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். '
மாற்கு 13:13
ஆம்,உலகத்தின் பந்தயத்தில் ஓடவில்லை,எனவே உலகத்தில் நிச்சயம் உபத்தரவம் உண்டு,ஜிவகிரிடத்தை நாம் சுதந்தரிக்க முடிவு பரியந்தம் விசுவாசத்துடன் நிலைத்திருக்கும்படி இறைவேண்டல் செய்வோம்,ஆரம்பம் அற்பமானாலும் முடிவு சம்பூரனமாகும்,வெற்றியோ கர்த்தராலே வரும்.
ஆமென்! அல்லேலூயா!😇🤗
Comments
Post a Comment