குணமாக்கும் தழும்புகள்🤗

கிறிஸ்து இயேசுவின் எனதருமை சகோதர சகோதரிகளே,நாள்தோறும் ஒரு தலைப்பின் மூலமாக இயேசுவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,ஆண்டவர் இயேசுவின் நாமம் மகிமை படுவதாக.
இன்றைய தலைப்பு நமக்காக இயேசுவானவர் செய்த தியாகத்தை பற்றியது,அவர் நமக்காய் அடிக்கப்பட்டதும் கைகளிலும்,கால்களிலும் ஆணியை ஏற்றுக்கொண்டதும் நமக்கு தெரிந்தவையே,காயம் ஆரியப்பின்தான் தழும்பு ஏற்படும்,வேதம் இவ்வாறாக கூறுகிறது:

" நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்."

1 பேதுரு 2:24

அவர் மரணத்தை ஏற்றுகொள்ளவும்,பரலோக மகிமை துறந்து தரித்திராய் இந்த பாவ பூமிக்கு வந்ததின் நோக்கம் இதுதான் நாம் பாவமற்றவர்கள் ஆக அவர் தன் மீது அதை சுமந்து பாவமாக என்னப்பட்டு கோரமாய் அவமான சின்னமான சிலுவையில் உடைத்து தொங்கவிடப்பட்டார்,அவரது தழும்புகளால் இன்றும் நம் பாவம் நீங்கி சுகமானோம் ,இதை எத்தனை பேர் விசுவாசிக்க ஆயத்தமாக உள்ளீர்கள் ,நீங்கள் அப்படிப்பட்ட விசுவாசத்துடன் இன்று ஜெபம் செய்பவரா அவர் காயங்கள் உங்களை இன்று குணமாக்கும்,பொதுவாக சுகம் பெற்ற யாருமே மீண்டும் அந்த நோய் நமக்கு வரக்கூடாது என்று ஆசைப்படுவோம் அது போல பாவம் என்னும் நோய் நீங்கி பரிசுத்தம் பெற்ற நாம் அதற்கு திரும்பாமல் இருப்போம்,உங்கள் பரிசுத்த வாழ்வை காத்து கொள்வதில் அச்சமா?,தேவையில்லை ஏனெனில் நம்மை வழி நடத்தும் ஒளி நமக்குள் இருக்கிறார் அவர் ஆலோசனைக்கு அர்பணிக்க பழகினால் என்றும் வெற்றியே.
ஆமென்! அல்லேலூயா!😊

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺