ஆசீர்வாதத்தின் தேவன்😇
இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக சமிப நாட்களில் கிறிஸ்தவ சத்தியம் குறித்தான குறுஞ்செய்திகளை வேதபூர்வமான ஆதாரங்களுடன் சுருக்கமான,மற்றும் எளிய புரிதலுடன் தியனித்தோம்,தேவனுடைய வார்த்தை வாசித்த உங்களில் இருந்து செயல் ஆற்றிர்க்கும் என்று அருமை நாதர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உறுதியுடன் விசுவாசிக்கிறேன்.
" நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்."
ஆதியாகமம் 12:2
ஆம் நண்பர்களே அவர் ஆசீர்வாதத்தின் தேவன்,அவர் நம்மை ஆசீர்வதித்தால் சகாக்காலமும் ஆசீர்வாதமாய் இருப்போம்,அதை உலக மனிதர்கள் நம்மிடம் இருந்து தட்டி பறிக்க முடியாது,ஏனெனில் அது தேவனால் உண்டானது.
' வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.'
சங்கீதம் 115:15
ஆம்,நீங்கள் பரலோகத்திற்கு உரிய செல்வத்தை நாடி தேடியபடியால் உங்களுக்கு கிடைத்த தேவ கிருபை என்ற ஆசீர்வாதம் நம்மை நரக ஆக்கினைக்கு நீங்களாக்கும் ஆசீர்வாதமாம்,இது நீங்கள் இயேசு நாதர் மேல் கொண்ட விசுவாசத்தால் இலவசமாக கிடைத்த ஆசீர்வாதம்.
"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;"
1 பேதுரு 5:10
ஆகவே ஜெபிபதிலும் விசுவாசத்திலும் பெலப்படுவோம்,தேவ ஆசிர்வாதங்களை நமதாக்குவோம்
ஆமென்! அல்லேலூயா!😊
Comments
Post a Comment