விசுவாசமும்,ஜெபமும்😇

கிறிஸ்து இயேசுவில் பிரியமும்,அன்பும் நிறைந்த சகோதர-சகோதரிகளே...கிருபையே உருவான நம் ஆண்டவர் இயேசுவின் சமாதானம் உங்கள் அனைவர் கூடவும் என்றென்றும் இருப்பதாக -ஆமென்
ஒரு விசுவாசியாக,சர்வ வல்ல தேவனை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு...அவரது கல்வாரி பலியின் மேன்மையையும்,இரட்சிப்பின் சந்தோசத்தையும் உணர்ந்த நமது கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் இன்றியமையாத ஒன்று,இந்த ஜெபத்திற்கும் தேவன் மேல் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது.
வேதத்தின் பல பகுதியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விசுவாசத்தின் மேன்மையை போதித்திருப்பதை காணலாம்,

"இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்."

மாற்கு 11:22

இயேசப்பா,தான் வாழ்ந்த மூன்றரை ஆண்டுகளில் செய்த அற்புதங்கள்,நமக்கு போதித்தவைகளில் பெரும்பாலானவைகள் தேவன் பெயரில் பற்றும் விசுவாசமே!

"ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்."

மாற்கு 11:24

கிரியை அற்ற விசுவாசமும் சரி,அதாவது ஜெபம் இல்லாத விசுவாசமும்;விசுவாசம் இல்லாமல் ஏறெடுக்கப்படும் ஜெபமும் உவர் நிலத்தில் இரைத்த நீருக்கு ஒப்பிடலாம்,அதனல்
 பயன் ஒன்றும் இல்லை!
இந்த அசைக்க முடியாத விசுவாசம்தான் ஆப்பிரகாம்,யாக்கோபு,எலியா முதலிய தேவ மனிதர்களிடம் காணப்பட்டது,ஆகவேதான் தேவன் அவர்களை ஆசீர்வாதத்தால் நிரப்பி வழிநடத்தினார்.
இனி வரும் பதிவுகளில் விசுவாசத்தால் கூடும் காரியங்களை விளக்காமாக கர்த்தருக்கு சித்தமானால் பார்கலாம்,உங்கள் வாழ்வில் விசுவாசம் எப்படிப்பட்டது என்று சுயச்சோதனை செய்து,விசுவாசத்தில் திடப்படுங்கள்.
ஆமென்! அல்லேலூயா!☺

Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺