மெய்யான தேற்றரவாளன்🕊🕊

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகள்,உங்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த நண்பர்கள் தின நல்வாழ்த்துகளை மனமாற தெரிவித்துக்கொள்கிறேன்
      இந்த அன்பின் நாளில் நம்மோடு சகாக்காலமும் இருந்து வழி நடத்தும் ஒரு உன்னதமான தேற்றவாளனை குறித்தும், அவர் நம்மில் ஆற்றும் செயல்களையும், அவர்  இல்லாதபோது நாம் சந்திக்கும் இன்னல்களையும் சுருக்கமாய் காணலாம்,கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக.
  கிறிஸ்துவை பின்பற்றும் நமக்கு நித்திய ஜீவன் உண்டு என்பது எவ்வளவு நிதர்சனமோ அவ்வாறே இவ்வுலக வாழ்வில் பலவித போராட்டங்களையும்,சிலுவைகளையும் மம்சிகமாகவோ,ஆவிக்குரிய வழியிலோ சந்திக்க வேண்டும் என்பதும் நிச்சயமே.
பல சூழ்நிலையில் இவ்வகை போராட்டத்தை எதிர்கொள்ளுகையில் தொய்வுண்டு,மனசோர்வடைகிறோம் நம்மில் பலரும் கடன் பிரச்னைகள்,எதிர்காலம் குறித்த கவலைகளால் நம்மை இறைவன் கைவிட்டாரோ என்றெல்லாம் கலக்கமடைவதுண்டு,இந்த போராட்டங்கள் இந்த உலகின் அதிபதி ஆன பிசாசானவனால் நம் விசுவாசம் அற்றுபோகும்படி பல சூழ்நிலையில் ஏவப்படும் அம்புகளே,இருப்பினும் அவனிலும் நம்மில் வாசம் செய்பவர் பெரியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு நாம் போராட்டத்திற்கு உள்ளாவோம் என்பதை முன்பே அறிந்த நம் ஆண்டவர்,உங்களுக்கு ஒரு தேற்றவாளனை அனுப்புவேன் என்று வாக்களித்தார்.

  " நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."

யோவான் 14:16

ஆம்,இவர் என்றும் நம்மோடு இருப்பவர்,நம்மை தாய் போல தேற்றி,தந்தை போல தவறும் போது கண்டித்து திருத்தி சகல சத்தியத்துக்குளும் போதித்து நடத்துவார்,நாம் சோர்வடையும் போது நமக்கு வாக்குதத்தம் தந்து நம்மோடு பேசி  திடப்படுத்துவர் 
 அவர் தேவசித்தத்தை ஏற்ற நேரத்தில் அறிவிப்பார்,அவர் தரும் வெளிச்சத்தில் நாம் நடக்கையில் நம் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
ஆமேன்! அல்லேலுயா!😊


Comments

Popular posts from this blog

மார்ஸ் மேடையும்,பவுலும்😎

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺