எல்லாம் நமக்காக🤔
கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அருமை சகோதர,சகோதரிகளே..நண்பர்களே,உங்கள் அனைவரையும் உலக இரட்சகராம் இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி இன்றைய பதிவிற்குள் வரவேற்கின்றேன்.இன்றைய தினத்தில் தேவ ஆவியானவர் உங்களிடம் பகிரும் படி எனக்கு வெளிபடுத்தியது 'தந்தையாம் தேவனின் மாபெரும் அன்பும்,இயேசு கிறிஸ்துவின் தியாகமும்'. தலைபிற்குள் கடந்து செல்லலாம் வாங்க!
சங்கீதக்காரன் தாவிது இவ்வாறாக கூறுவான்:
"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்" - சங்கீதம் 34:8
ஏன் கர்த்தரை ருசி பார்க்குமாறு தேவனின் தாசன் நம்மிடம் கூறியுள்ளார்,ஏனெனில் சுவையை உணர தான் முடியும்;கர்த்தரின் நன்மையையும் அனுபவித்துதான் உணர முடியும் என்றால் மட்டுமே அது புலப்படும்,
தேவன் நன்மையாய் இருப்பதினால் மாத்திரம் தாவிது அப்படி சொல்லவில்லை அவர் இந்த உலகத்தின் மேல் கொண்ட அளவற்ற இரக்கத்தையும் குறித்தே இப்படி சங்கீதம் பாடியுள்ளார்,அந்த அன்பும்,இரக்கமும் என்ன என்பதை இந்த பதிவு உங்களுக்கு எளிமையாய் விளக்கும்.
இயேசப்பாவை பரிசுத்த பேதுரு இவ்வாறாக குறிப்பிடுகிறார்
"உலக தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி" . ஆம்,கிறிஸ்து இயேசுவுக்கு பிரியமான என் அன்பு தேவபிள்ளைகளே நாம் செய்த பாவத்துக்காகவும்,தேவனை மறந்து செய்த அக்கிரமங்களுக்காகவுமே பாவமே அறியாத அவர்,பாவமானார்...கல்வாரியில் கிழித்து பாவச்சின்னமாக தொங்கவிடப்பட்டார்.இதெல்லாம் யாருக்காக? வசனம் இவ்வாறாக கூறுகிறது:
" தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்".
யோவான் 3:16
ஆம்,இவையெல்லாம் நமக்காகவே; நீங்களும்,நானும் நித்தியஜிவனை அடையும் பொருட்டு பரலோக அதிபதியாம் இயேசுகிறிஸ்து அதின் மகிமையை துறந்து தரித்திரராய்,ஒரு ஏழையாய் பூமிக்கு வந்தார்,நமது பாவ நிவாரணத்துக்காக சர்வாங்க பலியாக அவர் கல்வாரியில் பலியானார்,அவரது பரிசுத்த இரத்தம் நம்மை சகல பாவத்திலிருந்தும் விடுதலையாக்கும்,இத்தகைய தியாகம் செய்ய இயேசுவை தவிர இவ்வுலகில் இதுவரை யாரும் தோன்றவுமில்லை,தோன்றவும் போவதில்லை,ஆனால் இன்று கிறிஸ்தவர்களாகிய நம் நிலை?
1.சாதி,மதம் என்ற பெயரில் பிரிவினைவாதங்கள்
2.உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வேற்றுமை எண்ணங்கள்
3.துணிகர பாவக்காரியங்கள்,ஒன்று சொல்கிறேன் தேவன் கிருபை நிறைந்தவரே,கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தூரமட்டும் பாவத்தை மன்னிப்பவரே,அதற்காக கிருபை பெருகும் என்று பாவத்தில் இருக்கலாமா? கூடாதல்லவா! கிருபையின் பிரமாணத்தை(Grace doctrine) நம்மில் பலர் தவறாக புரிந்துவைத்துள்ளோம்.
பாவத்தை அறிக்கை செய்து,அதை முழுமையாக விட்டு விடுகிறவனே ,இரக்கம் பெறுவான் என தேவ வார்த்தை கூறுகிறது.இதையே கடைபிடிக்க வேண்டும்.
4.உலகத்தின் மேல் உயர்ந்த பற்று விளைவு தேவனை தேடாதநிலை.
இந்த நிலையெல்லாம் எப்போது மாறும்,தேவனின் உயர்ந்த அன்பு உங்களிலும்,என்னிலும் எப்போது வெளிப்படும்,உண்மையான கிறிஸ்தவ வாழ்விற்குள் எப்போது வருவோம் ,அதற்காக ஜெபிக்க முன் வருவோம்,தேவ அன்பை உணர்ந்து செயல்படுவோம்.
ஆமென்! அல்லேலூயா!😊🤗
Comments
Post a Comment