வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺
கிறிஸ்து இயேசுவில் பிரியமான என் அன்பு சகோதர, சகோதரிகளே. ஆண்டவர் படைத்ததொரு வெற்றியின் நாளில் இந்த பதிவின் வாயிலாக உங்கள் அனைவரோடும் இடை படுவதில் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து களிகூறுகிறேன்,இன்றைய தினத்தில் உலகிற்கு வெளிச்சமாக அருளப்பட்ட தேவனின் வார்த்தைகளை உள்ளடக்கிய வேதாகமம் கிறிஸ்தவ வாழ்விற்கு எவ்வளவு முக்கியம் என்று உங்களோடு பேசும்படி ஆவியானவர் என்னை ஏவினார்,சென்ற பதிவுகளில் 'மோசம் போக்கும் ஓநாய்கள்' என்ற தலைப்பில் சில காரியங்களை ஆவியானவர் வெளிப்படுத்தினார்,அதை படித்து இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன்,அந்த ஓநாய்களின் பட்சிக்கும் தன்மையையும்,மோசம் போக்கும் விதத்தையும் நாம் அறிந்துகொள்ள பரிசுத்த வேதாகமத்தை தவிர வேறு வேத புத்தகம் உலகில் இதுவரை அருளப்படவில்லை,எத்தனையோ மனிதர்கள் வேதாகமத்திற்கு ஒப்பாய் ஞானமான பல புத்தகங்கள் எழுதி இருக்கலாம் ,மனிதன் தவறுவான் தேவன் என்றென்றும் வாக்கு மாறாதவர்,உண்மையுள்ளவர் எனவேதான் பரிசுத்த வேதாகமத்திற்கு ஒப்பான புத்தகம் இல்லை என்றேன்-ஆமென்
1.வேதம் ஏன் வாசிக்கவேண்டும் :
இந்த நவினகாலத்தில் நாம் ஓடி ,ஓடி ஓய்வின்றி உழைக்கிறோம்,காலம் போகும் போக்கில் தேவ பிள்ளைகளாகிய நம்மிடத்தில் இரண்டு பிரதான காரியங்கள் குறைந்துவிட்டது; ஒன்று:ஜெபம்,மற்றொன்று:வேத வாசிப்பு, தேர்வில் வெற்றி பெற பாட புத்தகத்தை ஒரு வரிவிடாமல் வாசித்து மனப்பாடம் செய்யும் நம்மில் எத்தனை பேர் பரிசுத்த வேதத்தை முழுமையாக படித்திருப்போம்? எத்தனை வசனங்களை நம்மால் மனப்பாடமாக கூற இயலும், மிகவும் குறைவு அல்லவா? ஞாயிற்றுக்கிழமை மட்டும் என்னவோ தெரியவில்லை அளவுகடந்த பக்தி நமக்கு ஏற்படுகிறது,அதே பக்தி பண்டிகை காலங்களில் வரும்..எனக்கு அன்பான தேவ பிள்ளைகளே நாம் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களாகவும்,பண்டிகை கிறிஸ்தவர்களாகவும் வாழ அழைக்கப்படவில்லை அதற்கு பலர் இருக்கிறார்கள்,இயேசப்பா இந்த பூமியில் விட்டு சென்ற மகத்தான சுவிசேஷப் பணியை நிறைவேற்றி நித்திய ஜிவனை சுதந்தரிக்கவே இராஜக்களாகவும்,ஆசாரியர்களாகவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்;அதை ஒருபோதும் மறவாதிர்கள்
" ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்".
நீதிமொழிகள் 29:18
சீர்கெட்டுபோகும் இந்த உலகத்தில்,திரும்பும் திசையெல்லாம் பாவம் பெருகும் இந்த கடினமான சூழ்நிலையில் தேவன் நம்மை உயர்த்த, பாக்கிவான்களாக தேவன் முன் நீங்களும், நானும் நிற்க வேண்டுமென்றால் தயவு கூர்ந்து வேதம் வாசிப்பதை அதிகப்படுத்துங்கள்.
2.ஏன் வேதத்தை பின்பற்றவேண்டும்:
" வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது".
வெளிப்படுத்தினத விசேஷம் 1:3
காலம் சமிபமாய் இருக்கிறது,வரப்போகும் அக்கினி தீர்ப்புக்கு நாம் தபிக்க வேதமே வெளிச்சம்,அதை நாள்தோரும் ஆத்தும உணவாக உட்க்கொண்டு,கடைபிடித்தால் கர்த்தர் முன் நீதிமானாக அங்கிகரிக்கப்படுவோம்,
"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்".
ஓசியா 8:12
தேவன் நமக்கு எழுதி கொடுத்த மகத்துவங்களை படிக்க நாம் நேரம் ஒதுக்காவிட்டால் நம் காரியம் பூமியில் ஒருபோதும் வாய்காது,ஏதோ கடமைக்கு அல்ல தியனித்து வாசிக்கவேண்டும் அப்போதுதான் தேவன் உங்களோடு பேசுவதை உணரமுடியும்,இந்த நவின காலத்தில் யூடியுப்(youtube)வந்ததும் வந்தது,ஒரு தேவ செய்தியை கேட்டு,ஒரு பாடலை பாடினால் ஜெபம் முடிந்தது என்ற மனநிலைக்கு நாம் வந்துவிட்டோம்,ஒரு நாளுக்கு 24 மணிநேரம் தேவன் நமக்கு பரிசாக தினமும் தருகிறார் ,8 மணிநேரம் தூக்கம்,8மணிநேரம் உழைப்பு போக மீதி இருக்கும் அந்த 8மணிநேரம் களியாட்ட காரியமாகிய சினிமா முன்னும்,தொலைக்காட்சி முன்னும்,சமூக வலைதளகங்களிலும் வீணாக செலவிடுகிறோமே அதில் தேவனுக்காக ஒரு இரண்டு மணிநேரம் செலவிட்டால் நாம் குறைந்துவிடமாட்டோமே!
பரலோக காரியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அதை பொறுத்தே உலக காரியம் நமக்கு வாய்க்கும்.
இறுதியாக இளைஞர்களை,வலிப பெண்பிள்ளைகளே வேதத்தை தயவுசெய்து வாசியுங்கள் ஒரு சகோதரனாக இது என் வேண்டுகோள்,சங்கீதகாரன் இவ்வாறு கூறுகிறான்
"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்".
சங்கீதம் 119:11
"வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே".
சங்கீதம் 119:9
ஆம் சகோதர,சகோதரிகளே இந்த பருவத்தை தான் பிசாசு குறிவைத்து காத்திருக்கிறான், 'ஐந்தில் வளையாதது,ஐம்பதிலும் வளையாதல்லவா' எனவே உங்களை மோசம் போக்க காதல்,பொல்லாத வலைதளங்கள் என்று பாவ கண்ணியை கையிலே கொடுத்துள்ளான்,நீ வேதத்தை எடுப்பது குறைந்து,உன் செல்பேசியை எப்போது அதிகம் கையில் எடுகிறாயோ அப்போது வீழ்ந்துபோவாய் மறவாதே!
ஆமென்! அல்லேலூயா!😊🤗
👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻😍😍😍
ReplyDeleteThanks for comments dear,God bless you
Delete