நல்ல நண்பன் இயேசு🤗

இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே...நலமாக உள்ளீர்கள் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்,உங்கள் வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறதா?....இந்த உலக அன்பு உங்களை திருப்தி அடைய செய்கிறது? என்ன இவன் அரம்பமே கேள்வியோடு அரம்பிக்கிறானே என்று மனதிற்குள் திட்டுகிறிர்களா! உண்மை என்னவென்றால் இந்த உலகத்தில் எதுவுமே நிலையற்றதே...குறிப்பாக மனிதனிடம் இருக்கும் அன்பு மற்றும் பாசம்-இவை காலநிலை பொறுத்து மாறும்,உங்களில் மாறாத அன்பு உள்ளவர்கள் இருபீர்களேயானால் என்னை மன்னிக்கவும்! ஆனால் பெரும்பான்மை மக்கள் காட்டும் அன்பு மாறாத இருப்பது 'அத்தி பூதார்' போல அரிதான காரியம்,அதிலும் இந்த நவின உலகில் அன்பும் நவினமடைந்து விட்டது என்று சொல்லலாம் தானே....அனைத்து அன்பும் கையடக்கு கைப்பேசிககுள் அடக்கிவிட்டான் நவின கால மனிதன்...நமது உள்ளம் ஒரு கட்டத்தில் அன்பிற்கு ஏங்கும்,எனக்கென்று யாராவது இருக்கமாட்டார்களா...என்னை ஊக்குவிக்க,உற்சாகப்படுத்த ஒருவர் எனக்கு இருக்கமாட்டார்கள என்று நீங்கள் ஏங்கும் ஒருவராக இருந்தால் இந்த பதிவில் என் உயிர் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்....அவர் அந்தஸ்து பார்த்து பழகமாட்டார்,எந்த சூழ்நிலையிலும் தள்ளமாட்டார்,ஒருபோதும் விட்டுகொடுக்கமாட்டார்,நமக்காக நாள்தோறும் பரிந்து பேசுவார்....அநேகமாக உங்களில் பலர் கண்டுபிடித்திருப்பீர்கள்....சரியே! அவர்தான் 'இயேசப்பா'. இது அவர் தன் வாயலே சொன்ன பொன்மொழிகள்:

'நான் உங்களைச்  சிநேகிதர் என்றேன்'

யோவான்:15:15

" நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். "

யோவான் 15:14

'நான் உங்களை தெரிந்துக் கொண்டேன் ' 

யோவான்:15:16

நம்மை தெரிந்துகொள்ள பரலோகத்தை விட்டு பூலோகம் வந்த நண்பன்,நம் பாவத்திற்கு மீட்பு பொருளாய் தன்னையே தந்த நண்பன்,நாம் தவறும் போது கண்டித்து திருத்தும் நண்பன்,நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் நம்மோடு இருக்கும் நண்பன்,நமக்காய் பரிந்து பேசும் நண்பன்.....அவர் தான் என் அருமை நண்பன் இயேசு,அவரை அறியாமல் இருப்பீற்கள் ஆனால் இன்றே அறிந்துகொள்ள முயற்சியுங்கள்....நீங்கள் கூப்பிட்டால்,அதுவும் ஆழ்மனதில் இருந்து உண்மையாய் கூப்பிட்டால் உடனே வந்து நம்மை அரவனைப்பார்,அவரை நண்பனாக ஏற்றுகொள்வோர் அர்பணிப்பு இதயத்தோடே இன்றே கூப்பிடுங்கள்,அவரோடு நாம் பேசும் அந்த சிறு நேரமே ஜெபம் எனப்படும்,உங்கள் அன்பை பொறுத்து அந்த நேரம் அமையும்....இதை வாசித்த நீங்கள் கண்டிப்பாக இயேசப்பா கூட இன்றே பேசுவிங்க என்று நினைக்கிறேன்,சரி நான் என் நண்பனை சந்திக்க போகின்றேன் .....
ஆமென்! அல்லேலூயா!😇🤗

Comments

Post a Comment