மார்ஸ் மேடையும்,பவுலும்😎

கிறிஸ்து இயேசுவில் எனக்கு அன்பான சகோதர சகோதரிகளே,இந்த பதிவில் உங்களுடன் கலந்துரையாட கிருபை செய்த இயேசுப்பாவுக்கு  ஸ்தோத்திரங்கள்,அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும் நண்பர்களே இந்த 'மார்ஸ் மேடை' குறித்து நீங்கள் எங்காவது கேள்வி பட்டதுண்டா? உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்புகள் உண்டு,இந்த மார்ஸ் மேடை அத்தேனே என்னும் பட்டணத்தில் உள்ளது,சரி அதை நான் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதானே சிந்திக்கிறிர்கள் அதைதான் இந்த பதிவில் காணப்போகிறோம்,தொடர்ந்து ஜெபத்துடன் வாசியுங்கள்..நம்மில் பலர் இரட்ச்சிக் பட்டு இருக்கிறோம்-ஆமென்,இரட்ச்சிபின் முதல் நோக்கமே இயேசுவை அறியாத ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பது,ஆனால் வேதத்திலுள்ள சத்தியங்களை அறிந்த நமக்கோ யாரிடம்,எப்படி அந்த மீட்பின் செய்தியை அறிவிப்பது என்று தெரிவதில்லை,பல சமயங்களில் வாக்குவாதங்களுக்குள் சிக்குண்டு தவிப்பதுண்டு,இங்கு அத்தேனே பட்டணத்திலும் இதுபோன்ற கருத்து வேறுபாடு எழும்புகிறது ஆனால் அதை கையாழுபவர் நம்மிலும் சற்று தேரினவர் ஆம்,அப்போஸ்தலனாகிய பவுல் தான் அந்த நபர்,அவர் வாக்குவாதம் செய்த இடம் விக்கிரக ஆராதனைகாரர்கள் நிறைந்த பட்டணம்,அங்கு எப்படி விசுவாச வார்த்தைகளை ஆவியானவர் உதவியோடு அப்போஸ்தலனாகிய பவுல் விதைகிறார் என்று காண்போமா?

1.ஆலயங்களில் இருக்க கூடுமோ?

"உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை." 

அப்போஸ்தலர் 17:24

முதலில் சகலத்தையும் படைத்து ஆளுகை செய்யும் சர்வ வல்ல தேவனை எவ்வாறு இந்த சிறு கட்டிடங்களான கோவிலில் அடக்க கூடும் என்று ஞானமாய் வினவுகிறார்,எங்கே இரண்டு,மூன்று பேர் அவர் நமத்தினால் கூடுகிறிர்களோ,அவர்கள் நடுவில் பிரசணமாகும் தேவன் அவர் எனவே அவர் வாசம் செய்யவோ,தங்கி ஓய்வெடுக்கவோ கோவில்கள் தேவையில்லை என்று விளக்கம் தருகிறார்

2.பணிவிடை செய்யகூடுமோ?

" எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. "

அப்போஸ்தலர் 17:25

ஜிவனும்,சுவாசமும் நாம் அவரிடம் இருந்து பெற்றவை,சகல அற்புதங்களும்,ஆசிர்வாதங்களும் அப்படியே என்றிருக்க அவருக்கு நாம் பணிவிடை அதாவது அவரை ஒரு உருவமாக வடித்து அவரை உபசரிக்க கூடுமோ என்று கேட்கிறார்,அதுபோல மனிதனாகிய நாமே தேவைக்காக தேவனை சார்ந்து இருக்கவேண்டுமே அன்றி அவரது தேவைகாகவும்,நன்மைக்காகவும் தேவன் ஒருபோதும் நம்மை சார்ந்து இருப்பதில்லை என்று அவர்களது வழிபாட்டிலுள்ள குறையையும்,அவர் கால காலமாக பின்பற்றிய விக்கிரக ஆராதனை அர்த்தமற்றது என்று விளங்க பன்னுகிறார்.

இறுதியாக, நாம் தேவனின் சந்ததி என்றும்,தேவன் பாரபட்சமுள்ளவர் அல்ல, அவர் தன்னை உண்மையாய் தேடும் அனைவருக்கும் சமிபமானவர் என்றும் மிக தெளிவாய் புலப்படுத்துகிறார்,பின்பு இயேசுவையும் அவரது உயிர்தெழுதலின் மேன்மையையும்,நியாயதீர்பையும் விளக்கி தனது 'மார்ஸ் மேடை' பிரசங்கத்தை நிறைவு செய்கிறார்,இங்கு நாம் ஒரு காரியத்தை கவனித்தல் வேண்டும்,பரிசுத்த பவுல் இங்கு சுவிசேஷமாகிய சத்திய வசனங்களைதான் போதித்துள்ளார் என்ற போதும் எந்த சமயத்தினரையும் அவர் கலங்க பன்னவில்லை,யார் மனதும் புண்படுமாறு பேசவில்லை,வீண் வாக்குவாதங்கள் செய்யவில்லை,அவர்களது விக்கிரகத்தை பிசாசு என்றோ,சாத்தான் என்றோ சொல்லி மட்டு  படுத்தவில்லை,அங்கும் சிலர் விசுவாசிகளானார்கள் என்று வேதத்தில் காணலாம்,இதுதான் ஆவியானவரின் நடத்துதல்,நமக்கு நாவாக அவரை செயல்பட விட்டு கொடுத்தால் இது கூடும்,இனி சுவிசேஷம் சொல்லும் போது கவனத்துடன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்துங்கள்,அந்த அன்பை வாழ்வாக்குங்கள்,கர்த்தர் காரியத்தை வாய்க செய்வார்.

ஆமென்!!!  அல்லேலூயா!!!🤗😇

Comments

Popular posts from this blog

மரித்தவர்களே!!🙄

வேதத்தை மட்டுமே பின்பற்றுங்கள்☺